மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பால் காலமானார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உடலுக்கு ஆன்மீக தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது உடலுக்கு ஆளுநர் தமிழிசை, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. அதிகமானோர் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி அவர்கள் பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவம் மூலம் பலருக்கு நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார்! அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும், அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள்’ என பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours