மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த வருட இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது சத்தீஸ்கர் சென்று பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொள்ள இருக்கிறார் பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசம் செல்கிறார். அப்போது 50,700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருக்கிறார். மாநிலங்கள் முழுவதும் 10 புதிய தொழிற்சாலை திட்டங்கள், பினா சுத்தகரிப்பு நிலையத்தில் பெட்ரோகெமிக்கல் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் அதில் அடங்கும்.
பாரத் பெட்ரோலியம் லிமிடெட்டின் பினா சுத்திகரிப்பு நிலையம் 49 கோடி ரூபாயில் உருவாக்கப்பட இருக்கிறது, சுமார் 1,200 KTPA (ஆண்டுக்கு கிலோ-டன்கள்) பார்மா போன்ற பல்வேறு துறைகளுக்கான முக்கிய கூறுகளை உற்பத்தி செய்யும். இது இந்தியாவின் இறக்குமதியை குறைக்க பயனுள்ளதாக இருக்கும். பிரதமர் மோடியின் சுயசார்பு பாரத் திட்டத்தை நிறைவேற்றுதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்பின், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ரெய்கார் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட பேரணியில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். அங்கு 6350 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
+ There are no comments
Add yours