ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உட்பட உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் 10 நாட்களில் 450 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
இந்நிலையில் உத்தர பிரதேசம் சென்ற நடிகர் ரஜினி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இந்த சம்பவத்தை வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours