இலங்கை அரசு, மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேருக்கு 6 மாத சிறை, மேலும் ஒரு மீனவருக்கு இலங்கை ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.
இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
படகுகளில் கருப்புக்கொடி கட்டி 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து பேரணியாக சென்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அடையாள அட்டைகளை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours