பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது அரசியல் பிரச்னை அல்ல,அது அங்கீகாரம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதனை தொடர்ந்து மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது.அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெண்களுக்கான இடஒதுக்கீடு என்பது அரசியல் பிரச்னையாக மாற்றி வருவதாக குற்றம் சாட்டினார்.
இதற்க்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் மத்திய அரசு முன்வைத்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா இந்த நாட்டில் பெண்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள பாஜக இந்த மசோதாவில் எந்த அரசியலையும் செய்யவில்லை என்றும், சில கட்சிகளுக்கு பெண்கள் அதிகாரம் என்பது அரசியல் பிரச்சினையாகவும், மற்றவர்களுக்கு இது ஒரு கருவியாகவும் இருக்கலாம் என்றுகூறினார்.
இது பெண்கள் அதிகாரம் என்பது அரசியல் பிரச்சினை அல்ல, அது அங்கீகாரம் என்று தெரிவித்த அவர்,மத்தியில் நரேந்திர மோடி அரசு பெண்களுக்கு 100 மில்லியன் எல்பிஜி இணைப்புகளை வழங்கியுள்ளது, மேலும் 40 மில்லியன் வீடுகளைக் கட்டியுள்ளது” என்றார்.
(128வது அரசியலமைப்பு திருத்த மசோதா, 2023, மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முயற்சி செய்து வருவது குறிப்பிடதக்கது)
+ There are no comments
Add yours