பிரதமர்நரேந்திர மோதியின் ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு திட்டம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை திட்டம் போன்றவை நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் ஜன் தன் யோஜனா திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்து 9 ஆண்டு நிறைவு பெற்ற நிலையில அது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிதியமைச்சர் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டதாகவும் தற்போது ஜன் தன் வங்கி கணக்கு திட்டத்தின் கீழ் இதுவரை 50 கோடிக்கும் அதிகமானோர் வங்கிக் கணக்கை தொடங்கி பலனடைந்து இருப்பதாகவும் கூறினார். இது மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார்.
ஜன் தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களில் 56 சதவீதம் பேர் பெண்கள் என்றும் 67 சதவீதம் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
+ There are no comments
Add yours