அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் ஆபாசப் படத்தை முழுமையாக வெளியிடுவோம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மகளிரணி தலைவர் வாங்கலபுடி அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் நடிகையும், ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா மீது தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவதூறு பரப்பும் விதமாக பேசியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு கைதானதை தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது.
முன்னதாக, நடிகை ரோஜா ஆபாசப் படத்தில் நடித்ததாக சர்ச்சைக்குரிய வகையில் சத்திய நாராயண மூர்த்தி பேசிய நிலையில், இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, ரோஜா இந்த விவகாரம் குறித்து கண்ணீர் மல்க பேசினார். ரோஜா பேசியதை தொடர்ந்து பண்டாரு சத்தியநாராயணா கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி மகளிர் அணி தலைவர் வாங்கலபுடி அனிதா செய்தியாளர்கள் சந்திபின் போது ரோஜாவைக் கடுமையாக குற்றம்சாட்டினார். அப்போது பேசிய அவர்,
“சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசி உள்ளார். அப்போது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.. அமைச்சர்கள் மட்டும்தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?
சட்டப்பேரவையில் ரோஜா பேசியதை எல்லாம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ரோஜாவை யாரும் பெண் என்று கருதவில்லை.. அவரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள்கூட வெறுக்கிறார்கள்.
பெண்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவே ரோஜா அழுகிறார்.. நான்கரை ஆண்டுகாலமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் அனைவருமே கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள்.. இப்போது ரோஜா நடித்த படத்தின் டிரெய்லர் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறது.. வருங்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
+ There are no comments
Add yours