நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் சில தினங்களுக்கு முன்னர் தனது கட்டுப்பாட்டில் சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் பற்றி அவதூறு பரப்பும் விதத்தில் கருத்து பதவிட்டு இருந்தார் என கூறப்படுகிறது. பிரவீன் ராஜ் பாஜகவில் சமூக வலைதள பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பிரவீன் ராஜ் மீது கரூர் சைபர் கிராம் போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. காங்கிரஸார் அளித்த புகாரின் பெயரில் கரூர் சைபர் கிராம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ராசிபுரத்தில் பிரவீன் ராஜை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பிரவீன் ராஜ் இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்னர் ஆஜர் படுத்தப்பட்டார். பிரவீன் ராஜை வரும் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பாஜக நிர்வாகி பிரவீன் ராஜ் விடுமுறை நாளில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பது குறித்து பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours