சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு !

Spread the love

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளுக்கு கோரிக்கைகளை பரிசீலித்து, மின் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல ஆண்டு மின்கட்டண ஆணையின் படி, 2023 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.7 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

இந்த நடைமுறையை ஆய்வு செய்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மாண்பமை ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தும் போது பொதுமக்களும் தொழில்துறையினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

இதன்படி கட்டண உயர்வு விகிதம்மறுஆய்வு செய்யப்பட்டு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தின் விலைக் குறியீட்டு எண்ணிற்கு பதிலாக சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் விலை குறியீட்டு எண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனால் கட்டண உயர்வின் அளவு 4.7 ரூ லிருந்து 2:18 ரூ ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொழில்களின் நலம் காக்க தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளின் கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு நிதி, மனிதவள மேம்பாடு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர், மாண்புமிகு சிறுகுறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள் அமைச்சர் மற்றும் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆகியோர்கள் முன்னிலையில் 21.07.2023 அன்று தலைமைச்செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜவுளித் தொழிலின் நிலைத் தன்மையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கனிவான பார்வைக்கு எடுத்துச் சென்றனர்.
தமிழ்நாட்டில் தொழில்துறையிலும் ஜவுளித்துறையிலும் தற்போது நிலவி வரும் இடர்பாடுகளை ஆராய்ந்து, ஒன்றிய அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கோரிக்கைகளை கடிதம் மூலம் தெரிவித்தும், மின்கட்டணம் தொடர்பான தொழிற்சாலைகளின் கோரிக்கைகளை பரிசீலித்தும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
அறிவுறுத்தினார்கள். அதன் வழங்கப்படுகின்றன.

அடிப்படையில் கீழ்க்கள் சலுகைகள்:

பருவகாலத் தேவைக்கு ஏற்ப மாறும் தன்மையுள்ள மின்பளுவை கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு நிலை கட்டணத்தை குறைத்து கொள்ளும்வகையில், குறைத்துக்கொள்ளவும், மேலும்அனுமதிக்கப்பட்ட மின்பளுவினை தேவைப்படும்போது அனுமதிக்கப்பட்ட
மின்பளுவிற்குள் உயர்த்திக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. இச்சலுகையை ஆண்டு ஒன்றுக்கு நான்கு முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சூரிய ஒளி சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூலதன மானியம் வழங்கப்படும்.
12 கிலோ வாட் க்கு குறைவாக உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வீதப்பட்டி IIB லிருந்து IIIA1 வீதப்பட்டிக்கு மாற்றுவது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துரு பெற்றபின் பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours