இன்று மதிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டிற்கான எந்தவித அறிவிப்புகளும், நிதியும் இடம்பெறவில்லை என்பது பேசு பொருளாகி வருகிறது .
கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயிலுக்கான எந்தவித அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேலும் மூன்று ஆண்டுகளாக விடுவிக்கபடாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயிலுக்கான இரண்டாம் கட்ட நிதி விடுவிப்பு குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை பார்க்கும்போது இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதை பார்க்க முடிகிறது.
வழக்கமாக பட்ஜெட் உரையில் இடம்பெறும் திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற எந்த மேற்கோள்களும் இந்த உரையில் இடம்பெறவில்லை. நிர்மலா சீதாராமனின் ஒன்றரை மணி நேர பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற வாசகமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours