பரபரக்கும் தெலுங்கானா அரசியல் களம்.! சோனியா காந்தியுடன் ஒய்.எஸ்.ஷர்மிளா திடீர் சந்திப்பு.!

Spread the love

இன்று மும்பையில் இந்தியா கூட்டணி சார்பில் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் என இந்தியா கூட்டணியில் உள்ள 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்றுள்ளன. இன்றைய எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளர், தொகுதி பங்கீடு என பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் தான் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் , ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதிரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.

இந்தாண்டு இறுதியில் தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், தெலுங்கானாவில் ஆளும் சந்திர சேகரராவ் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியுடன், ஒய்.எஸ்.ஷர்மிளா சந்திப்பானது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது . தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours