மக்களவைக்கு இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஆறாவது கட்டமாக டெல்லியின் ஏழு தொகுதிகள் உட்பட 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் 14, ஹரியானாவில் 10, பீகார் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 11.13 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், இதில் 5 கோடியே 84 லட்சம் பேர் ஆண்கள், 5 கோடியே 29 லட்சம் பேர் பெண்கள். 5 ஆயிரத்து 120 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்காக ஒரு லட்சத்து 14 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணியில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுகிறார்கள். பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
+ There are no comments
Add yours