முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கில் காலமானார்..!

Spread the love

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, கில் 1996 முதல் 2001 வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். 2004 இல் காங்கிரஸில் இணைந்தார். அவர் தேர்தல் ஆணையராக பதவி வகித்ததற்காக பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதே அவரது முக்கிய சாதனையாகும். இவர் தேர்தல் ஆணையராக இருந்த போது, 1998 இல் 12வது மக்களவைக்கும் 1999 இல் 13வது மக்களவைக்கும், பொதுத் தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது.

காங்கிரஸ் உறுப்பினராக மாநிலங்களவை உறுப்பினரான கில், 2008 இல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் கில் உடல்நலக்குறைவு காரணமாக தனது 86 வயதில் காலமானார்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு டெல்லி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர், பத்ம விபூஷன், ஸ்ரீ மனோகர் சிங் கில் ஜியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. முன்னதாக ஒரு அரசு ஊழியராகவும், விளையாட்டு, தேர்தல் செயல்முறைகள் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் நீண்ட காலம் நீடித்தன. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours