குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 மக்களவைத் தொகுதிக்கு வரும் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அம்மாநிலத்தின் ஆனந்த் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை சரமாரியாக விளாசினார்.
இந்தியாவில் காங்கிரஸ் பலவீனமடைந்த போதெல்லாம் பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்காக துவா செய்தார்கள் என்று விமர்சித்த பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மரணித்து கொண்டிருப்பதை பார்த்து பாகிஸ்தான் அழுது கொண்டிருப்பதாகவும் நக்கலாக கூறினார் பிரதமர் மோடி. பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஃபவத் சவுத்ரி ராகுலைப் பாராட்டி பேசிய நிலையில் ஒரு நாள் கழித்து பிரதமர் மோடி விளாசியுள்ளார்.
பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்த நாட்டிற்கும் காங்கிரஸுக்கும் இடையிலான தொடர்பு அம்பலமாகியுள்ளது என்றும் கூறினார். இதை ‘விதியின் வினோதம்’ என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டில் காங்கிரஸ் பலவீனமாகி வருகிறது என்றும் மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தாலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது என்றும் காட்டமாக கூறினார்.
4 கண்டெய்னர்களில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.2000 கோடி.. ஆந்திராவை அதிர வைத்த சம்பவம்!
காங்கிரஸ் கட்சி அழுவதை பார்த்து பாகிஸ்தான் அழுகிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் இளவரசரை பிரதமராக்க பாகிஸ்தான் தலைவர்கள் துவா செய்கின்றனர் என்றும் கூறினார். காங்கிரஸ் பாகிஸ்தானின் பங்காளி என்பது நாம் அனைவரும் அறிந்ததே… அவர்களின் கூட்டு நேற்று அம்பலமாகிவிட்டது என்றும் பிரதமர் மோடி விளாசினார்.
காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு தகவல்களை வழங்கியது என்றும் ஆனால் மோடி தலைமையிலான பலமான மத்திய அரசு பயங்கரவாதிகளை அங்கேயே சென்று ஒழித்துக் கட்டியது என்றும் பிரதமர் மோடி கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது என்றும் தற்போது கோதுமையை இறக்குமதி செய்ய வீடு வீடாக செல்கிறது என்றும் விளாசினார்.
பாகிஸ்தானில் கையில் வெடிகுண்டுகளை வைத்திருந்தவர்கள் இன்று பிச்சை கிண்ணம் ஏந்தி இருக்கின்றனர் என்றும் காட்டமாக விமர்சித்தார் பிரதமர் மோடி. மேலும் பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியாவில் வலுவான ஆட்சி அமைவதை விரும்பவில்லை என்றும் பிரதமர் மோடி குஜராத் மக்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார்.
+ There are no comments
Add yours