வரும் ஒக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதற்காக ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்த தொடர் முடிந்ததும், அப்படியே உலக கோப்பை தொடரிலும் இரு அணிகளும் விளையாட உள்ளன.
ஏற்கனவே 2 ஒருநாள் போட்டிகள் நிறைவு பெற்றுவிட்டன. அதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை கே.எல்.ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணி வீழ்த்தி 2-0 என்ற வெற்றி கணக்கில் முன்னிலை வகித்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி விட்டது.
இதனை தொடர்ந்து இன்று மூன்றாது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத், ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது. வழக்கம் போல பிற்பகல் 1.30 மணியளவில் இந்த போட்டி துவங்க உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் இந்த போட்டியையும் வென்று ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இன்று இந்திய அணி களமிறங்க உள்ளது.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த போட்டியில் களமிறங்க உள்ளனர். அதே போல ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, முகமது சமி, சுப்மன் கில் , அக்சர் பட்டேல் ஆகியோர் இந்த போட்டியில் விளையடா மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கேப்டனாக ரோஹித் சர்மா, அவருடன் தொடக்க வீரராக இஷான் கிஷான், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்தூல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
+ There are no comments
Add yours