இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது….உதயநிதி பெருமிதம்!!

Spread the love

ஆண்களுக்கான 3000 மீட்டர் ஆண்கள் பிரிவு Speed Skating-ல் வெண்கல பதக்கமும் வென்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துகள் அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீனா ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி செப்டம்பர் 23 அன்று தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி முடிவடையும் .இதில் இந்தியா சார்பில் 655 பேர் கொண்ட குழு கலந்து கொண்டுள்ளது.

அந்த வகையில்,ஆண்களுக்கான 3000 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் ரிலேயில் ஆர்யன் பால், ஆனந்த் குமார், சித்தாந்த் மற்றும் விக்ரம் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

இந்த நிலையில் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஆண்கள் பிரிவு Speed Skating-ல் வெண்கல பதக்கமும் வென்ற இந்திய அணிக்குஅமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிட்டிவிட்டுள்ளதாவது..

சீனாவில் நடைபெற்று வரும் AsianGames2023-ல், 4×400 மீட்டர் கலப்பு இரட்டையர் தொடர் ஓட்டப்பந்தயப் போட்டியில் வெள்ளியும், 3000 மீட்டர் ஆண்கள் பிரிவு Speed Skating-ல் வெண்கல பதக்கமும் வென்ற இந்திய அணிக்கு என் வாழ்த்துகள்.

இந்தப் போட்டிகளில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முன்னாள் மாணவியர் சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், மாணவர் ராஜேஷ் மற்றும் ஆனந்தகுமார் ஆகியோருக்கு என் அன்பும், பாராட்டும். Mission International Medals Scheme-ல் ஊக்கத்தொகை பெற்று வரும் வீராங்கனை சுபா வெங்கடேசன், மேலும் பல சாதனைகள் புரியட்டும்.

சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் இந்திய அணியில், நம் வீரர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு அடைந்து வரும் தன்னிகரற்ற வளர்ச்சிக்கு சான்றாக அமைந்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours