பாஜக 401 தொகுதிகள் வெற்றிபெறும் என்று கணித்தவர் நேரலையில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரல்.

Spread the love

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 401 இடங்களில் வெற்றி பெறும் என்று கணித்து கருத்து கணிப்பு வெளியிட்டவர் நேரலை விவாதத்தின் போது கண்ணீர் விட்டு கதறிய வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

கடைசிக் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்குப் பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் முன்னணி ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று செய்திகளை வெளியிட்டன. அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று செய்திகள் வெளியிட்டன.

ஆனால், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில் தனது தேர்தல் கணிப்புகள் முற்றிலும் தவறானதை அடுத்து, தொலைக்காட்சி சேனலின் நேரலை நிகழ்ச்சியில் தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா என்பவர் கண்ணீர் விட்டு கதறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஏனெனில், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், இந்திய டுடே ஊடகத்துடன் இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி 401 தொகுதிகளை வெல்லும் எனவும், இந்தியா கூட்டணி 150 இடங்களைத் தான் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது.

இதனால் ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் பிரதீப் குப்தா தனது கணிப்பு முற்றிலும் தவறாக போனதை அடுத்து, தொலைக்காட்சி சேனலின் நேரலை விவாத நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு வருந்தினார். அவர் கண்ணீர் வடித்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆக்ஸிஸ் மை இந்தியா மட்டுமின்றி பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு பெரும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தன. ஆனால், அத்தனை கணிப்புகளும் தவிடுபொடியாகி இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours