துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் ஏறக்குறைய 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது என்றும் குவைத் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான குவைத் தூதர் மிஷால் அல் ஷமாலி கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கும் குவைத் நாட்டிற்கும் நீண்ட கால வரலாற்று சிறப்புமிக்க நட்புறவு நிலவி வருகிறது. கலாசாரம், வர்த்தகம் , பொருளாதாரம் என பல துறைகளில் குவைத்திற்கு இந்தியா பெரும் துணையாக உள்ளது.
குவைத் நாட்டில் இருந்து இந்திய கண்டத்திற்கு வர்த்தக பரிமாற்றம் நடந்தது; பண்டையகால வரலாற்று ஆய்வுகள் இதனை உறுதி செய்கிறது. குவைத்தில் 10 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் குடியேறி வசித்து வருகின்றனர்.
குவைத் நாட்டவர்களும் இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றனர். குவைத் நாட்டில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவிட் காலத்தில் குவைத்தில் இந்திய சுகாதார பணியாளர்களின் பங்கு பெரும் மதிப்புக்குரியது. இவ்வாறு ஷமாலி கூறினார்.
+ There are no comments
Add yours