26 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி திருமணமான பெண்ணின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் ஒன்றை அளித்தார். அதில், மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு மற்றும் மோசமான நிதி நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனது 26 வார மூன்றாவது கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க வேண்டும் தெரிவித்து இருந்தார். இதை அக்டோபர் 9 ஆம் தேதி விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பெண்ணின் மனுவிற்கு அனுமதி வழங்கி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி, திருமணமான பெண்ணின் 26 வாரக் கரு ஏதேனும் குறைபாடு உள்ளதா..? என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு எய்ம்ஸ் மருத்துவக்குழுவிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதைத்தொடர்ந்து அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) அறிக்கையின்படி, கரு உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், குழந்தைக்கு எந்த அசாதாரணமும் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு தீர்ப்பு வழங்கினர். அதில் கர்ப்பத்தின் காலம் 24 வாரங்களைக் கடந்துவிட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை சரியான நேரத்தில் பிரசவத்தை நடத்தும் என்றும் பிரசவத்திற்கு அரசு உதவும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
மருத்துவக் கருத்தரிப்பு (எம்டிபி) சட்டத்தின் கீழ், திருமணமான பெண்கள் மற்றும் கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றோர் மற்றும் சிறார்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு கர்ப்பத்தை கலைப்பதற்கான உச்ச வரம்பு 24 வாரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours