திருப்பதியில் டிசம்பர் மாததுக்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது.

அதன்படி, திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிக்க தேவையான 300 ரூபாய் டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட உள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 10 மணிக்கு துவங்கி என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி செல்லும் பக்தர்கள் எப்போதும் டிக்கெட்களை தேவஸ்தான வெப்சைட்டில் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

+ There are no comments
Add yours