சூரியன் குறித்து ஆராய இஸ்ரோ தயாரித்துள்ள ‘ஆதித்யா எல்-1’ விண்கலம், அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தனது விண்வெளி பயணத்தை மேற்கொள்ளும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை தன்வசமாக்கியுள்ள இந்தியா, அடுத்து சூரியன் குறித்து ஆராய விண்கலம் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையையும் தன் வசமாக உள்ளது.
சூரியனுக்கு மிக அருகில் சென்று இந்தியாவின் ஆதித்யா விண்கலம் ஆய்வு மேற்கொள்வதன் மூலம், பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனைப் பற்றியும் பிரபஞ்சத்தை பற்றியும் இதுவரை அறிந்திடாத பல தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விண்கலம் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக இருக்கும் லெக்ரேஞ்சியன் பாயிண்ட் – 1 அருகிலுள்ள வெற்றிட சுற்று பாதைக்குள் நுழைய 120 நாட்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours