அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு சிங்கம். நீண்ட காலம் அவரை சிறைக்குள் வைத்திருக்க முடியாது என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறினார். தில்லி கலால் கொள்கை தொடா்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா்.
இந்தநிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(மார்ச். 31) மெகா பேரணி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய சுனிதா கேஜரிவால், நாங்கள் இன்று வாக்கு கேட்கவில்லை. புதிய இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியர்களை அழைக்கிறோம் என்று தனது பேச்சை தொடங்கியவர், சிறையில் இருந்து தனது கணவர் ஒரு செய்தியை அனுப்பியதாக கூறினார்.
ஆனால், இந்தச் செய்தியைப் படிப்பதற்கு முன், உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன்.பிரதமர் நரேந்திர மோடி, என் கணவரை சிறையில் அடைத்தார். பிரதமர் செய்தது சரியா? கெஜ்ரிவால் உண்மையான தேசபக்தர், நேர்மையானவர் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
” சிறையில் இருக்கும் அவரை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். அவர் ராஜிநாமா செய்ய வேண்டுமா? உங்கள் முதல்வர் கெஜ்ரிவால் ஒரு சிங்கம், அவர்களால் அவரை நீண்ட காலம் சிறையில் வைத்திருக்க முடியாது.எனது கணவருக்கு பெரும் ஆதரவளித்து வரும் மக்களுக்கு நன்றி. இந்த கொடுங்கோல் ஆட்சி நிலைக்காது என்று” அவர் மேலும் கூறினார். பின்னர், “நான் இன்று வாக்குகளை கேட்கவில்லை. புதிய இந்தியாவை உருவாக்க 140 கோடி இந்தியர்களை அழைக்கிறேன்.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரீகம் கொண்ட மாபெரும் தேசம் இந்தியா.நான் நினைக்கிறேன். சிறைக்குள் இருந்து பாரதத் தாயை நினைத்துப் பார்க்கிறேன்.அவள் வேதனையில் இருக்கிறாள்,’இந்தியா’ கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால், நாங்கள் புதிய இந்தியாவை உருவாக்குவோம்”. “இந்தியக் கூட்டணியின் சார்பில் ஆறு வாக்குறுதிகளை முன்வைக்கிறேன். நாடு முழுவதும் 24 மணி நேர மின்சார வசதி ஏற்படுத்தப்படும். ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
அனைத்து கிராமங்களிலும் சிறந்த அரசுப் பள்ளிகள் அமைக்கப்படும். தில்லியில் அமைக்கப்பட்டுள்ளது போல் ஒவ்வொரு கிராமத்திலும் மொஹல்லா மருத்துவமனை அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்நோக்கு சிறப்புப் பிரிவுகள் அடங்கிய அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும். இதன்மூலம், அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது போல விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு சரியான விலை வழங்கப்படும்.
75 ஆண்டுகளாக அநீதியை எதிர்கொண்டுள்ள தில்லி மக்களுக்கு முழு அதிகாரம் பெற்ற மாநிலமாக தில்லியை மாற்றுவோம். இந்த ஆறு வாக்குறுதிகளையும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். அனைத்து திட்டங்களையும் நான் செய்துள்ளேன். இந்த வாக்குறுதிகளுக்கான பணம் எங்கிருந்து வரும். சிறையில் எனது தீர்மானம் மேலும் வலுப்பெற்றுள்ளது, நான் விரைவில் வெளியே வருவேன்” என்று சுனிதா கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் தனது கணவர் மக்களுக்காக எழுதிய கடிதத்தை படித்துக் காண்பித்தார்.
+ There are no comments
Add yours