தபால் வழியாக ரூ.2,000 நோட்டுகளை ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் தங்களது வங்கி கணக்கில் பற்று வைத்துக் கொள்ளவும் அக்டோபா்- 7 வரை மத்திய அரசு அவகாசம் அளித்தது. அதன் பின்னா் ரிசா்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவோ அல்லது தங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளவோ ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. இதற்கு எவ்வித கால அவகாசமும் தற்போது வரை விதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ரிசா்வ் வங்கி கிளை அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற மக்கள் கூடுவதைத் தவிா்க்கும் பொருட்டு, தபால் வழியாக ரிசா்வ் வங்கி அலுவலகங்களுக்கு அனுப்பி, தொகையை தங்களின் வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்துள்ளது.
+ There are no comments
Add yours