தோல்வியை சந்திப்பாரா ஜெகன் மோகன் ரெட்டி !

Spread the love

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது.

இம்முறை ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது. கருத்துக்கணிப்புகளு, கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்த தேர்தல் பின்னடைவை தரும் என்று தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிரபல ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி பெரும் தோல்வியை சந்திப்பார் என தெரிவித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் YSRCP வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர்தான் காரணம் என கூறப்பட்டது.

தற்போது அவரே வரவிருக்கும் மாநில சட்டமன்ற தேர்தலில் YS ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வி அடைவார் என கூறியிருப்பது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பிஏசியின் நிறுவனர் கிஷோர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், ஜெகன் தோற்கடிக்க முடியாத அளவுக்கு வலிமையாக உள்ளார் என்று சொல்ல முடியாது, அவர் ஸ்டிக்கி விக்கெட்டாக உள்ளார். அவர் சரிவை சந்தித்து வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டி பெரிய அளவில் இழப்பை சந்திக்க போகிறர் என்று என் உள்ளம் சொல்கிறது.. அது சாதாரண இழப்பல்ல.. பெரும் இழப்பு.. என கூறியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சியில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் தேர்தலில் வெற்றிபெற “இலவசங்களை” மட்டுமே நம்பியிருப்பதாகவும் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு மாநிலத்தின் தலைவரான நீங்கள் அனைத்து முட்டைகளையும் ‘இலவசம்’ என்று அழைக்கப்படும் ஒரு கூடையில் வைக்க முடியாது என்றும் ஜெகன் தவறு செய்து விட்டார் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் மீண்டும் திரும்புவது மிகவும் கடினமாக இருக்கும் என்று தான் நினைப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் இந்த கருத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் கிஷோரின் கணிப்புகள் “தவறானவை” என தெரிவித்துள்ளது. ” பிரசாந்த் கிஷோரின் ‘குடல்’ மற்றும் அவரது கணிப்புகள் பகுத்தறிவற்றவை என்றும் சமீப காலங்களில் அவருடைய கணிப்புகள் குறி தவறவிட்டன என்றும் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் பிஆர்எஸ் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸும் வெற்றிபெறும் என்ற அவரது கணிப்புகள் பொய்த்துப் போனது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும்பீகாரில் நேரடி அரசியலில் பிரசாந்த் கிஷோர், தோல்வியடைந்ததையும் மறந்துவிடக் கூடாது. பிரசாந்த் கிஷோர் இந்த சீரற்ற, தவறான கணிப்புகளை அவர் எதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்?” என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours