ஒற்றைப் பயணியால் டெர்மினலுக்கே திரும்பிய இண்டிகோ விமானம்!

Spread the love

மும்பையிலிருந்து கிளம்ப யத்தனித்த விமானம் ஒன்றுஅதில் நின்றபடி பயணித்தவரால் மீண்டும் டெர்மினலுக்கேதிரும்பியது.

விமான பயணம் என்பது சாதாரணமாகி வரும்போதுஅதில் விசித்திரங்கள் பலவும் அரங்கேறி வருகின்றனஅப்படியான விசித்திரம் ஒன்றுக்குஇன்று காலை மும்பையிலிருந்து வாராணசிக்கு கிளம்பிய இண்டிகோ விமானம்ஆளானதுவிமானம் தனது பறத்தலுக்கு முந்தைய ஓடுதள பாதை பயணத்தை எட்ட இருந்தபோதுவிமானத்தின்கடைசி இருக்கையருகே பயணி ஒருவர் நின்றபடி பயணிப்பதை விமான சிப்பந்தி ஒருவர் கண்டறிந்தார்.

அவர் விடுத்த எச்சரிக்கையை அடுத்துஇண்டிகோ விமானம் தனது பறத்தல் முயற்சியை கைவிட்டு மீண்டும்டெர்மினலுக்கே திரும்பியதுநின்றபடி பயணித்தவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்இண்டிகோ விமானசேவை நிறுவனத்தின் தவறு வெளிப்பட்டது

விமான சேவை நிறுவனங்கள்தங்கள் பயணியர் விமானங்கள் காலி இருக்கைகளுடன் பறப்பதை தவிர்க்க சிலநேரங்களில்இருக்கைகளின் எண்ணிக்கைக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்கும்.

போதிய எண்ணிக்கையில் பயணிகள் திரளாததுகடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்யும் பயணிகள் உள்ளிட்டகாரணங்களினால் பொதுவாகஇந்த கூடுதலாக விற்பனையாகும் டிக்கெட்டுகளால் பிரச்சினைகள் எழுவதில்லைஆனால் மும்பையிலிருந்து வாராணசிக்கு இன்று காலை கிளம்பிய இண்டிகோ விமானத்தில்அதன் இருக்கைகள்அனைத்தும் நிரம்பியிருந்ததுபயணிகளில் ஒருவர் தனக்கான இருக்கை கிடைக்காததில்விமானத்தின் கடைசிவரிசையில் நின்றபடி தத்தளித்துக்கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட நகரப் பேருந்து போல அந்த இண்டிகோ விமானம்நின்றபடி பயணிப்பவருடன் வானில் பறக்கஇருந்ததுவிமான நிலையத்தின் டெர்மினலில் இருந்து ஓடுபாதைக்கு செல்வதற்கான ’டாக்ஸிங்’ எனப்படும் ஊர்ந்துசெல்லும் பயண நேரத்தில்கூடுதல் பயணியை விமான சிப்பந்தி கண்டுகொண்டார்

இதனால் மீண்டும் டெர்மினலுக்கு திரும்பிய இண்டிகோ விமானம்ஒற்றைப் பயணியை இறக்கிவிட்டுமீண்டும்ஒருமுறை வழக்கமான சரிபார்ப்பு நடைமுறைகளுக்குப் பின்னரே கிளம்பியதுஇதனால் சுமார் ஒரு மணி நேரதாமதத்துக்குப் பின்னரே அந்த விமானம் வாராணசிக்கு கிளம்பியது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours