ராகுல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதவர் – அனுராக் தாக்கூர்!

Spread the love

நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரண்டும் நேற்றுடன் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கைவைத்து தொடர் அமளியில் ஈடுபட்டதால் அடுத்தடுத்த நாட்களில் மக்களவை உறுப்பினர்கள் 100 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 46 பேர் என மொத்தம் 146 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திரிணமூல் காங்கிரஸின் எம்.பி கல்யாண் பானர்ஜி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர், அவை நடவடிக்கையின் போது செய்வதை போல் மிமிக்ரி செய்து நடித்துக் காட்டினார். இதனை ராகுல் தனது மொபைல்போனில் வீடியோ எடுத்தார். இதனை, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கண்டித்தனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், “இந்தியா கூட்டணியினர் வடக்கு, தெற்கு எனவும், கலாசார ரீதியிலும் நாட்டை பிரிக்கின்றனர். தேர்தலில் 3 மாநிலங்களில் தோல்வியடைந்த உடன் அவர்களின் இத்தகைய செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு பிறகு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் துணை ஜனாதிபதி போன்று மிமிக்ரி செய்கின்றனர். இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் வீடியோ பதிவு செய்வது அவமானகரமானது. இது அரசியல் அமைப்புகள் மீது அவர்களின் அவமரியாதையை காட்டுகிறது. இது தனி மனிதரை கிண்டல் செய்வது அல்ல. அரசியல் அமைப்பை விமர்சிப்பது போன்றது. அவர் மாநிலங்களவை தலைவர் மட்டுமல்லாமல், நாட்டின் துணை ஜனாதிபதி. விவசாயிகள் மற்றும் ஜாட் சமூகத்தில் இருந்து வந்துள்ளார். நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். ராகுல் முதிர்ச்சி அற்றவராக உள்ளார்.

ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையில்லாதவராக காணப்படுகிறார். நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும், அவரின் இத்தகைய செயல்பாடுகள் அவமானகரமானது. அவரின் செயல்பாடுகளுக்காக நாட்டு மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். ஒரு எம்.பி தவறு செய்தால், அவருடன் சேர்ந்து செயல்படுவதை விட அதனை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்” தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours