பெங்களூருவில் ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வணிக நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்துள்ளன.
பெங்களூருவில் 1 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க, ஏராளமான ஹோட்டல்கள், பப்கள் மற்றும் டாக்ஸி நிறுவனங்கள் தள்ளுபடிகள், இலவசங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளன. சலுகைகளைப் பெற தங்கள் வாக்களித்தவர்கள் தங்கள் ஆள்காட்டி விரல் மையை காட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளன.
ந்ருபதுங்கா சாலையில் உள்ள நிசர்கா கிராண்ட் ஹோட்டல், வாக்களிக்கும் நாளில் வாக்காளர்களுக்கு இலவச வெண்ணெய் தோசை, நெய் சாதம் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை வழங்குகிறது. பெங்களூரில் உள்ள உடுப்பி ருச்சி கபெவில் வாக்களித்துவிட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவமாக மாக்டைல் வழங்குவதாக அறிவித்துள்ளது. மால்குடி மைலாரி மனே எனும் உணவகம் மைலாரி தோசை மற்றும் பில்டர் காபி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல் ஐயங்கார் ஃபிரஷ் பேக்கரி அன்றைய தினத்தில் வாக்களித்துவிட்டு வரும் அனைவருக்கும் தங்களிடத்தில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
பெல்லந்தூரில் உள்ள ரெஸ்டோ-பப் டெக் ஆஃப் ப்ரூஸ், 26ம் தேதி வாக்களித்தவர்களுக்கு, ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் ஒரு பாராட்டுக் குவளை பீர் மற்றும் தள்ளுபடியை வழங்குகிறது. மற்றொரு பப்-ஆன SOCIAL, “வாக்களித்த பிறகு, மை தடவிய விரல்களைக் காட்டுபவர்கள் தங்கள் உணவில் 20% தள்ளுபடியைப் பெறுவார்கள். இந்த சலுகை அந்தந்த நகரங்களில் வாக்களிக்கும் நாளுக்குப் பிறகு ஒரு வாரத்திற்கு நடைமுறையில் இருக்கும்” என்று SOCIAL-ன் தாய் நிறுவனமான Impresario Entertainment & Hospitality Pvt Ltd இன் தலைமை வளர்ச்சி அதிகாரி திவ்யா அகர்வால் தெரிவிதுள்ளார்.
தேர்தல் தினத்தில் வாக்களித்துவிட்டு கையில் மையினைக் காட்டும் அனைவருக்கும் 15 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என பெங்களூரில் உள்ள வொண்டர்லா அறிவித்துள்ளது. பெங்களூருவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ மற்றும் கேப் சவாரிகளை வழங்கவுள்ளதாக ரேபிடோ அறிவித்துள்ளது. “பெங்களூரு, மைசூர் மற்றும் மங்களூருவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிப்பதன் மூலம் தங்கள் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்… மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்று ரேபிடோவின் இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி கூறினார்.
+ There are no comments
Add yours