விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது மோடியின் அரசு – மல்லிகார்ஜுன கார்கே!

Spread the love

மோடி அரசு, விவசாயிகளின் குரலை நசுக்குவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி இன்று காலை முதல் டிராக்டரில் பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் போராட்டத்தை தடுக்க ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேச மாநில போலீஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் விவசாயிகள் வாகனங்களைத் தடுக்க முள்வேலி, கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தடையை மீறி பேரணி சென்ற விவசாயிகள் மீது ஹரியாணா மாநிலம் சம்பு எல்லையில் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.

இந்நிலையில் விவசாயிகள் மீதான அடக்குமுறைக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முள் கம்பிகள், ட்ரோன்களிலிருந்து கண்ணீர் புகை, ஆணிகள், துப்பாக்கிகள், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது.

விவசாயிகளை ‘அந்தோலன்ஜீவி’ (போராட்டம் மூலம் வாழ்பவர்கள்), ‘ஒட்டுண்ணி’ என அழைத்து அவதூறு செய்ததை நினைவில் கொள்ளுங்கள். 750 விவசாயிகள் தங்கள் உயிர்களை இழந்தனர்.

10 ஆண்டுகளில், நாட்டின் உணவு வழங்குபவர்களுக்கு மோடி அரசு அளித்த மூன்று வாக்குறுதிகளை மீறியுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, சுவாமிநாதன் அறிக்கை பரிந்துரையை செயல்படுத்துவது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உறுதியை வழங்குவது ஆகியவை இதில் அடங்கும். சத்தீஸ்கரின் அம்பிகாப்பூரில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நீதிக்கு காங்கிரஸ் குரல் எழுப்பும். நாங்கள் பயப்பட மாட்டோம், தலை குனியமாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours