அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டி – ஷர்மிளா!

Spread the love

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று என்று அம்மாநில தலைவர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக அண்மையில் காங்கிரஸில் இணைந்த ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று முன்தினம் விஜயவாடாவில் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஷர்மிளா செய்தியாளர்களிடம் பேசினார். “நான் ஒரு பெண் என்பதால் என்னை சிறுமைப்படுத்த வேண்டாம். ஆந்திரா எனது பிறந்த வீடு, தெலங்கானா எனது புகுந்த வீடு, தெலங்கானாவில் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி விட்டேன். ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி 175 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 25 எம்.பி தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். கட்சியை வளர்க்க அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். அப்போது பல்வேறு மாவட்டங்களிலும் பிற கட்சிகளில் இருந்து காங்கிரஸில் தொண்டர்கள் இணையும் விழா நடைபெறும்.

ஒரு நாளைக்கு 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைப்பு நடைபெறும். இதே போல 9 நாட்கள் இணைப்பு விழா நடைபெற உள்ளது. 24ம் தேதி முதல் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்படும். ்அவர்களில் தகுதியான புதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன” என்று ஷர்மிளா கூறினார்.

மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷர்மிளா விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதால், ஆந்திராவில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours