பாஜகவை தென் மாநிலங்களில் அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா, வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசக்கூடாது என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பெருநகர் கிளை பணிமனையில் கட்டப்பட்டுள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலக கட்டிடத்தை, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை அதிமுக துவங்கிவிட்டதாகவும், விரைவில் எந்தந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளது என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதால் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டனும் கடும் கோபத்திற்கு உள்ளாவான். அதிமுகவை கட்டிக்காத்த ஜெயலலிதாவை பற்றியும், எடப்பாடியார் பற்றியும், அதிமுகவை பற்றியும் மிகக் கடுமையான விமர்சனங்களை சில பாஜக தலைவர்கள் முன் வைத்துள்ளனர். அத்தகைய நபர்களோடு இவர்கள் சென்றால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் வீறுகொண்டு செயல்படுவான் என்றார்.
மேலும், தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இதனை கண்டித்து பிப்ரவரி ஒன்றாம் தேதி தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அப்போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எம்ஜிஆர் என்றால் ஒருவர்தான் இருக்க முடியும் என்பது போல் மோடி என்றால் ஒருவர்தான் என பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பாஜக என்பது வட மாநிலத்தோடு தான் இருந்தது தென் மாநிலங்களில் அந்த கட்சியே கிடையாது. தென் மாநிலங்களில் அழைத்து வந்து தேசியம் இந்த சொல்லுக்கு அடித்தளமிட்டவர் ஜெயலலிதா அவர்கள். அண்ணாமலை மறந்துவிடக்கூடாது அது அவருக்கு தெரியாது. இது தற்போது உயிரோடு இருக்கும் அத்வானிக்கே தெரியும். எனவே அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கிய முக்கியமான தலைவராக இருந்தவர் ஜெயலலிதா அவர்கள்.
இவ்வாறு உருவாக்கிய கூட்டணியில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை செய்து தராத காரணத்தினால் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டார். இதை ஜெயலலிதா அவர்கள் உருவாக்கிக் கொடுத்தது என்பதை அண்ணாமலை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
வாஜ்பாய் பற்றி அண்ணாமலை பேசுவதில்லையே என்ன காரணம்? நரேந்திர மோடியை பற்றி பேசும் அண்ணாமலை அவரை உருவாக்கிய தலைவரை பற்றி பேச வேண்டுமா? வேண்டாமா? மாறாக நரேந்திர மோடி ஒருவரை மட்டும் முன்னிறுத்துகிறார். நரேந்திர மோடியை முன்னிறுத்தி இவர் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். ஆனால் அவரை முன்னிறுத்துவது கட்சித் தலைவர்களை கலங்கப்படுத்துகிறது. இதை அறிந்து கொண்டு நாட்டின் பிரதமர் அண்ணாமலையின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும் என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
+ There are no comments
Add yours