அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், நிதி திரட்டும் பணியில், காங்., ஈடுபட்டுள்ளது. இதற்காக, ‘நாட்டுக்காக நன்கொடை’ என்ற இயக்கத்தை, இன்று முதல் அக்கட்சி துவக்கி உள்ளது. இதன்படி வீடு வீடாக சென்று நிதி திரட்ட, காங்., நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், காங்கிரசின் இந்த திட்டத்தை, பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், 1984ல் வெளியான இன்குலாப் படத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் காதர் கான் ஆகியோர் பேசும் காட்சிகளை, அக்கட்சி வெளியிட்டுள்ளது.இந்த காட்சியில், கறுப்புப் பணத்தை பயன்படுத்தி ஓட்டுகளை வாங்குவதும், அந்த பணத்தை நலம் விரும்பிகள் நன்கொடையாக வழங்குவதும் போன்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த வீடியோவுடன், பா.ஜ., வெளியிட்ட பதிவில், ‘இந்த வீடியோவில் உள்ள காட்சியும், கதாபாத்திரங்களும் கற்பனை அல்ல. மக்களிடம் இருந்து நிதி திரட்ட அழைப்பு விடுத்த காங்., – எம்.பி., தீரஜ் சாஹுவின் அழைப்பை போல் உள்ளது’ என, குறிப்பிட்டுள்ளது.
ஜார்க்கண்ட் காங்., – எம்.பி., தீரஜ் சாஹுவின் வீடு மற்றும் அலுவலங்களில், சமீபத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 350 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவத்தை, இன்குலாப் பட காட்சியுடன் ஒப்பிட்டு, காங்கிரசின், ‘நாட்டுக்காக நன்கொடை’ இயக்கத்தை, பா.ஜ., விமர்சனம் செய்து உள்ளது.
+ There are no comments
Add yours