மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணிஅமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 26-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன. மாநிலத்துக்கு மாநிலம் கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், பாஜகவை எதிர்கொள்ள, தங்களிடையே உள்ள வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகிவருகிறது. தற்போது கூட்டணிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான பணிகளை காங்கிரஸ் துவக்கியுள்ளது. இந்நிலையில் 539 மக்களவைத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சிவெளியிட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ்கட்சி 539 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் 4 தொகுதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “எத்தனைஇடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்து வரும் நாள்களில் கட்சி முடிவு செய்யும். ஆனால் 500-க்கும்மேற்பட்ட தொகுதிகளில், காங்கிரஸ் சார்பில் பார்வையாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி பொறுப்பு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது குறித்து 10 முதல் 15 நாள்களுக்குள் எதிர்க்கட்சிதலைவர்கள் கூடி முடிவெடுப்பார்கள்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
+ There are no comments
Add yours