உரிமை மீட்பு போராட்டம் என ஓபிஎஸ் தனது சகாக்கள் 4 பேருடன் ஊர் ஊராக செல்கிறார், என்ன உரிமை இருக்கிறது ? – திண்டுக்கல் சீனிவாசன்.
ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை பொதுக்குழுவில் நீக்கிவிட்டாகிவிட்டது.
அனைத்து நீதிமன்றங்களும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் இபிஎஸ் என்பதை உறுதி செய்துள்ளது.
மோடிதான் நாட்டின் பிரதமர். ஆகவே யாராவது கூட்டணிக்கு வாங்க என ஓபிஎஸ் சொல்கிறார்.
நரேந்திர மோடிதான் இந்நாட்டின் பிரதமர் என நாங்களும் சொல்லி கொண்டு இருந்தோம். ஆனால், அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் என பாஜகவினர் பேசியது சரியல்ல.
எங்களை மிரட்ட அண்ணாமலையை வைத்து பேச வைத்ததால், அமித்ஷா, மோடியிடம் ஆணித்தரமாக சொல்லிவிட்டு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியவர் எடப்பாடி பழனிச்சாமி.
ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலா ஆகியோர் மண்குதிரை போன்றவர்கள். அவர்களை ஆதரிக்கும் நண்பர்கள் இனியும் அவர்களை நம்பாதீர்கள் என திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.
+ There are no comments
Add yours