காஷ்மீர் வழக்கு… உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது… பிரதமர் மோடி !

Spread the love

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதாவது, பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது மூன்று வகையான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனி தீர்ப்பு நீதிபதி கவாய், சூர்ய காந்த், சஞ்சீவ் கண்ணா தனி தீர்ப்பு மற்றும் நீதிபதி கவுல் தனி தீர்ப்பு வழங்கினர்.

தீர்ப்பில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும். பிரிவு 370 என்பது தற்காலிக நடவடிக்கைதான். போர் சூழலை கருத்தில்கொண்டு சிறப்பு அந்தஸ்து தற்காலிகமானதே. எனவே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து செல்லும். பாதுகாப்பு காரணங்களாக லடாக் யூனியன் பிரதேசமாக தொடரலாம்.

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் நடவடிக்கைளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதில், குறிப்பாக விரைவில் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என தலைமை நீதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாகவோ அல்லது யூனியன் பிரதேசத்தை மாநிலமாகவோ மாற்றுவது என்பது நாடாளுமன்றத்திற்கு உள்ள அதிகாரம் இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. அரசியல் சாசன அமர்வில் 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் சட்ட பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்றபடி தீர்ப்பு வழங்கியதால் அதுவே இறுதி தீர்ப்பாக கருதப்படுகிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்று வருகின்றனர். அந்தவகையில், காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், காஷ்மீர் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது.

நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், பிரகாசமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும் தீர்ப்பு திகழ்கிறது. வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கூட்டு முயற்சிக்கு சாட்சியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு விளங்குகிறது. 370வது சட்டப்பிரிவால் வஞ்சிக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகத்திற்கு பயன்களை கொண்டு சேர்க்க உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் ஒற்றுமை, நம்பிக்கை, வளர்ச்சியை பிரகடனப்படுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியர்களான நாம் உயர்த்தி பிடிக்கும் ஒற்றுமையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் கனவுகளை நனவாக்க உறுதியுடன் இருப்பதாகவும், வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours