கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதியின் பேச்சுக்கு எழுந்த ஆதரவும் எதிர்ப்பும்!

Spread the love

நான் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பிராட்வே டான பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2,200 பேருக்கு புத்தாடைகள், அரிசி, மளிகைப்பொருட்கள், கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் பின்னர் மேடையில் பேசிய அவர், ”நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் என்னை கிறிஸ்தவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்தவன். இந்து என்று அழைத்தால் நான் இந்து. முஸ்லிம் என்று அழைத்தால் நான் ஒரு முஸ்லிம். எனக்கென்று ஜாதியும் மதமும் கிடையாது. என்றும் பிறப்பால் அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்” என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து கலமையான விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன. ஒரு அமைச்சராக இருந்து கொண்டு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என கூறுவது அவரது பதவிக்கு அழகு அல்ல என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவரது கருத்தை முழுமையாக கவனித்தால் மட்டுமே உதயநிதி சொல்லியிருப்பது விளங்கும் என்று திமுக அபிமானிகள் வாதிட்டு வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours