சத்தீஸ்கரில் புதிய முதலமைச்சராக விஷ்ணுதியோ சாய் தேர்வு…!

Spread the love

சத்தீஸ்கர் மக்கள் கடந்த வாரம் முதல் புதிய முதல்வரின் பெயர் அறிவிப்பிற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற பாஜக சட்டப்பேரவைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் விஷ்ணுதியோ சாய் முதலமைச்சராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவர்களது காத்திருப்பு முடிவுக்கு வந்தது.

விஷ்ணுதேவ் சாய் 30 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்டவர். முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சத்தீஸ்கருக்கு முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் யார் என எதிர்பார்த்தபோது முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சிங், பாஜக மாநிலத் தலைவர் அருண் சாவ், கோமதி சாய் மற்றும் முன்னாள் அமைச்சர் லதா உசெந்தி ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது என பேசப்பட்ட நிலையில், தற்போது விஷ்ணுதியோ சாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாநில மற்றும் மத்திய அரசியலில் அனுபவம் வாய்ந்த விஷ்ணுதியோ -வை பாஜக சத்தீஸ்கர் முதல்வராக தேர்வு செய்துள்ளது. விஷ்ணுதியோ சாய் மூன்றாவது முறை எம்.பி.யாக இருந்துள்ளார். இந்த முறை குங்குரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விஷ்ணுதியோ சாய் தோற்கடித்தார். குங்குரி தொகுதியில் விஷ்ணுதியோ 87604 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மின்ஜ் 62063 வாக்குகளும் பெற்றனர். விஷ்ணுதியோ சாய் 1990 முதல் அரசியலில் உள்ளார். 1990ல் மத்திய பிரதேசத்தில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விஷ்ணுதியோ சாய் நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய இணை அமைச்சராகவும், எஃகு சுரங்கங்கள், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக 2014 முதல் 2019 வரை இருந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் கட்சி அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை 2020 ஜூன் மாதம் சத்தீஸ்கர் மாநிலத் தலைவராக நியமித்தது. அவர் ஆகஸ்ட் 2022 வரை பதவி வகித்தார். முன்னதாக, 2010 மற்றும் 2014ல் சத்தீஸ்கர் மாநிலத் தலைவராகவும் இருந்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours