பாஜக உடனான கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்ததற்கு பின்னர் சிறுபான்மையினர் தங்களை நோக்கி வருவதாகவும், இதனால் தான் சிறுபான்மையினரை அழைத்து முதலமைச்சர் பேசியதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்த பின்னர், சிறுபான்மையினர் அதிக அளவில் அதிமுகவை தேடி வருகின்றனர். இதனால் உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினரை அழைத்து பேசுகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுபான்மையினரை திமுக கண்டு கொள்ளவில்லை.
மூன்று ஆண்டுகளில் பேசாதவர் இப்போது பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்?” என்றார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிமேலும், “திமுகவின் அறிவிப்பும் பேச்சும் பிரம்மாண்டமாக இருக்கும்.
நீட் தேர்வு ரத்துக்காக வாங்கிய கையெழுத்துக்கள் பயனற்று குப்பைத்தொட்டிகள் கிடைக்கின்றன” என்று விமர்சித்தார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் பிரசித்தி பெற்ற தையல்நாயகி அம்மன் உடனமர் வைத்தியநாத சுவாமியை, இபிஎஸ் தரிசனம் செய்தார்.
வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சுவாமி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்து, எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன் உட்பட கட்சியினர் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
+ There are no comments
Add yours