தன்னை உடல்ரீதியாக காயப்படுத்த சதி… கேரள ஆளுநர் !

Spread the love

புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சென்று கொண்டிருந்த போது, ஆளும் சிபிஐ(எம்)ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கவர்னர் ஆரிப் முகமது கான், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தற்செயலான சம்பவம் அல்ல என்றும், மாறாக வேண்டுமென்றே தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், முதலமைச்சர் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தால், போராட்டக்காரர்கள் இருக்கும் கார்கள் அங்கு அனுமதிக்கப்படுமா? போலீசார் யாரையும் முதலமைச்சரின் கார் அருகே வர அனுமதிப்பார்களா? என்னை உடல்ரீதியாக காயப்படுத்த சதி செய்ய இவர்களை அனுப்புவது யார் என்றால் முதல்வர் தான், நான் தெளிவாகச் சொல்கிறேன்.

அவரது வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த கவர்னர் கான், கேரளாவில் ஜனநாயகம் சீரழிந்து வருவதாகவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தம்மை நோக்கி கறுப்புக் கொடியை அசைத்தது மட்டுமல்லாமல், இருபுறமும் அவரது வாகனத்தைத் தாக்கியதாகவும் திரு கான் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், நான் என் காரில் இருந்து இறங்கினேன். பிறகு ஏன் ஓடிவிட்டார்கள்? காவல்துறைக்கு இவர்கள் இருந்தது குறித்து தெரியும். ஆனால் முதல்வர் அவர்களை வழிநடத்தும்போது ஏழை போலீஸ் என்ன செய்வார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours