எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் (Khushbu Sundar) ஈடுபட்டுள்ள நிலையில் பாஜக தேர்தல் பரப்புரையில் இருந்து விலகுவதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ள குஷ்பு தனது X தள பக்கத்தில் கூறிருப்பதாவது :சில நேரங்களில், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன் என்றும் எலும்பில் ஏற்பட்ட காயத்தால் தான் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் தன்னால் பிரச்சாரத்தில் இனிமேல் கலந்து கொள்ள முடியாது.
மக்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்றாலும் தனது சமூக வலைதள பக்கங்கள் மூலமாக (Khushbu Sundar) பிரதமர் மோடியின் சாதனைகளை கூறி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என குஷ்பு தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours