பேச்சை நிறுத்திய அண்ணாமலை… காரணம் என்ன?!

Spread the love

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியின் பத்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளையும் பெருமைகளையும் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறி வருகிறார். அதேநேரத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களையும் எடுத்துக்கூறி வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் அண்ணாமலை நடைபயணம்

குறிப்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று என் மண் என் மக்கள் நடை பயணத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சாதனைகளை ஒலிப்பெருக்கி மூலம் விளக்கிக் கொண்டிருந்தார் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.

பள்ளிவாசலில் ஓதப்பட்ட பாங்கு

அப்போது இஸ்லாமியர்களின் தொழுகை நேரம் என்பதால் அங்கிருந்த பள்ளிவாசலில் பாங்கு ஓதப்பட்டது. அதுவரை மக்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்த அண்ணாமலை பாங்கு ஒலிப்பதைக் கேட்டதும், உடனே தனது பேச்சை நிறுத்தி விட்டு ஒலிபெருக்கியை ஆஃப் செய்தார். பின்னர் பாங்கு ஓதுவது முடிந்ததும் அண்ணாமலை மீண்டும் தனது ஒலிப்பெருக்கியை ஆன் செய்து பேச தொடங்கினார்.

கொண்டாடும் நெட்டிசன்ஸ்

இதனைக் கவனித்த தொண்டர்கள் அண்ணாமலை மீண்டும் பேச்சை தொடங்கியதும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் அண்ணாமலையின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்து வரும் நெட்டிசன்கள், அந்த வீடியோவையும் நெட்டிசன்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர். பாஜக, இஸ்லாமிய மக்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான கட்சி என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

அண்ணாமலை செயலுக்கு வரவேற்பு

குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாஜகவை மதவெறி கட்சி என கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் அண்ணாமலை, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மத மோதல்களை உருவாக்குவதாக குற்றம்சாட்டி வருகிறார். பாஜகவை சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க திமுக முயற்சிப்பதாகவும் கூறி வருகிறார். இந்நிலையில் பள்ளிவாசலில் பாங்கு ஓதும்போது அண்ணாமலை அமைதி காத்தது வரவேற்பை பெற்றுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours