இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து குறித்து, ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பண்டித நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏனெனில் அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர்.
இதெல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற அடிப்படைப் பிரச்சினையிலிருந்து திசைதிருப்பவும், நாட்டின் செல்வம் எங்கே போகிறது? என்பதை மறைக்கவும் செய்யும் செயலாகும். அடிப்படைப் பிரச்சினை ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தான். மக்களின் பணத்தைப் பெறுவது யார்? அவர்கள் இந்த பிரச்சினையை விவாதிக்க விரும்பவில்லை, அவர்கள் இந்த கேள்வியில் இருந்து தப்பிக்க பார்க்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையை முன்னெடுத்துச் சென்று ஏழைகள் அவர்களுக்கு உரிமையானதைப் பெறுவதை உறுதி செய்வோம். சத்தீஸ்கரில் நமது முதல்வர் கூட OBCயைச் சேர்ந்தவர்தான், அவர்களும் OBC முதல்வர் என்று அறிவித்தார்கள். ஆனால் அவர்களில் எத்தனை சதவீதம் கட்டமைப்பில் இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.
பிரதமர் மோடி OBC பிரிவைச் சேர்ந்தவர், ஆனால் அரசு 90 பேரால் நடத்தப்படுகிறது, அவர்களில் 3 பேர் மட்டுமே OBCயைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அலுவலகங்கள் ஒரு மூலையில் உள்ளன. நிறுவன அமைப்பில் ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியினரின் பங்கேற்பு பற்றியதுதான் எனது கேள்வி. இந்தப் பிரச்சினையில் இருந்து நம்மைத் திசைதிருப்ப ஜவஹர்லால் நேருவைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் பேசுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours