நடிகை ரோஜா மீது ‘ஆடுதாம் ஆந்திரா’ என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கிய 100 கோடி நிதியில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அமைச்சராக இருந்தவர் ஆர்.கே.ரோஜா.
அப்போது ‘ஆடுதாம் ஆந்திரா’ என்ற நிகழ்ச்சி மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையிலும் , எதிர்காலத்திற்கான பொன்னான பாதை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட், கோ-கோ, கபடி, பூப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான போட்டிகள் மாநிலம் முழுவதும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக ஐந்து நிலைகளில் நடத்தப்படும் என்றும் ,இதற்காக மொத்த பட்ஜெட் ரூ 100 கோடி ஜெகன் மோகன் அரசு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் நடிகை ரோஜா மீது ‘ஆடுதாம் ஆந்திரா’ என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கிய 100 கோடி நிதியில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக நேற்று மாநில அத்யா-பாட்டியா சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாத், சிஐடியிடம் புகார் அளித்தார். மேலும் இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ரோஜா மீது விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டு நடிகை ரோஜா படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.
+ There are no comments
Add yours