மீண்டும் வெற்றி பெறுவாரா மஹுவா மொய்த்ரா !

Spread the love

2024 மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. எப்படியும் மார்ச் 8க்குள் வந்துவிடும் என்கின்றனர். இந்த சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிப்பில் மும்முரம் காட்டி வருகின்றன. கூட்டணி உடன்படிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தொகுதி பேரம் தொடர்பாக அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் மஹுவா மொய்த்ரா வெற்றி வாய்ப்பு குறித்த பேச்சு எழுந்துள்ளது.

கிருஷ்ணா நகர் தொகுதி

இவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில் முதல்முறை போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் கல்யாண் சவுபேவை 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி ஆனார். கடந்த ஆண்டு மஹுவா மொய்த்ரா மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மக்களவையில் கேள்விகள் கேட்க துபாய் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானியிடம் பணம் வாங்கி கொண்டு செயல்பட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம்

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, எம்.பி பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இவருக்கு ஆதரவாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி குரல் கொடுத்திருந்தார். மீண்டு வருவார் என்று நம்பிக்கை அளித்தார்.

மக்களவை தேர்தல் 2024

இந்நிலையில் 2024 மக்களவை தேர்தலுக்கு திரிணாமூல் காங்கிரஸ் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் கிருஷ்ணா நகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா மீண்டும் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வெற்றி வாய்ப்பு எப்படி என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. இதற்கிடையில் இந்தியா டிவி – சி.என்.எக்ஸ் இணைந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
தெலங்கானாவில் பாஜகவுக்கு அதிர்ச்சி.. ஆந்திராவில் வேற மாறி.. திகில் கிளப்பும் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

கருத்துக்கணிப்பு முடிவுகள்

இதன் முடிவுகளில் கிருஷ்ணா நகர் தொகுதி நிலவரம் என்னவென்று தேடிப் பார்த்தால் மஹுவா மொய்த்ராவிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது. இந்த தொகுதியில் பாஜகவிற்கு மிகப்பெரிய ஆதரவு அலை இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. கிருஷ்ணா நகரில் மஹுவா மொய்த்ரா போட்டியிடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு, இந்த தொகுதியில் எப்படி என்று மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

தென்கிழக்கு மண்டலம்

அதற்கு பின்னடைவு தான் பதிலாக கிடைத்துள்ளது. கிருஷ்ணா நகர் மக்களவை தொகுதி தென்கிழக்கு பெங்கால் மண்டலத்தில் அமைந்துள்ளது. இதில் மொத்தம் 12 தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் திரிணாமூல் காங்கிரஸ் 8, பாஜக 3, காங்கிரஸ் 1 என வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாஜக வசம் செல்லக் கூடிய தொகுதிகளில் கிருஷ்ணா நகரும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours