பிரதமர் மோடி ஊழல் ஒழிப்பு குறித்து உணர்ச்சிகரமாகப் பேசுவார். ஆனால், அதில் பெருமளவு ஆர்வம் கிடையாது’’ என ஆசிரியர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
வெளிப்படைத்தன்மை இல்லாத நிதி வசூல்
அம்முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை.
தனி நபர் தரத்தக்க நன்கொடை ரூ. 20 ஆயிரம் என்ற உச்சவரம்பு – பிறகு கம்பெனி நிகர லாபத்தில் ஏழரை சதவிகிதம் மட்டுமே அதிகபட்சமாக அளிக்கலாம்.
வெளிநாட்டுக் கம்பெனிகள் நன்கொடை கொடுக்க முடியாது என்பது போன்றவற்றை அறவே நீக்கி, உச்சவரம்பின்றித் தரலாம்.
கோடி கோடி ரூபாய் மதிப்புடைய தேர்தல் பத்திரத்தை யார் வேண்டுமானாலும் தரலாம்;
பிறருக்கு அதை அளித்து, அளித்தவர் அடையாளத்தைக் கண்டுபிடிக்காமல் ஆக்கிக் கொள்ளலாம் என்பன போன்றவற்றை தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த உச்சநீதிமன்ற 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு செல்லாது என்று தீர்ப்பளித்ததோடு, முழு விவரங்களை அளிக்க ஸ்டேட் பேங்க், தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு ஆணையிட்டுள்ளது.
‘‘ஊழலை ஒழிக்கும் உத்தமர் அவதாரம்‘’ ஏற்ற மோடி ஆட்சிக்கு இது பின்னடைவு என்று அவர்களது ஊதுகுழல் ஏடுகூட தலையங்கம் எழுதும் நிலைக்கு, நிலைமை பட்டாங்கமாய் ஆகிவிட்டது!
அதே உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை எப்படி காணாமற் போகச் செய்வதில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியான பிரதமர் மோடி ஆட்சியில்,
அண்மையில் சண்டிகரில் மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிகாரியைப் பயன்படுத்தி, அதிக பெரும்பான்மை பெற்ற ஆம்ஆத்மி கட்சி உறுப்பினர்களின் வாக்குகளை செல்லாததாக்கி,
பா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெற்றது என்பதைப் பகிரங்கப் பிரகடனம் செய்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்ததை நாடே அறியும்.
உச்சநீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரித்து, ஊழல் செய்த அதிகாரியைத் தண்டித்தாகவேண்டும் என்றும்,
திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மேயர் தேர்தலில் வென்றார் என்றும் அறிவித்து பா.ஜ.க.வின் முகத்தில் அறைந்துள்ளது!
இதில் ஓர் உச்சக்கட்ட அரசியல் கேவலம், பா.ஜ.க. தலைவர் நட்டா உடனே அங்கே பித்தலாட்டமாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ‘அந்த மேயரை’ பாராட்டி மனங்குளிர்ந்த கொடுமை!
பொதுமக்களாகிய வாக்காளர்கள் – இந்தியா முழுவதும் உள்ளவர்கள் இதனை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தில்லுமுல்லு தேர்தல் திருகுதாளங்கள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு சண்டிகர் மேயர் தேர்தல் சமீபத்திய உதாரணம்.
மூன்றாவதாக, காஷ்மீரில் 2018-2019 இல் ஆளுநராகப் பதவியேற்ற சத்தியபால் மாலிக் அவர்களது வீட்டில் அப்போது அவர் ஒரு பிரச்சினையில் அனுமதிக்க,
தன்னிடமே 300 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன்வந்ததுபற்றி பேசிய பழையப் பேச்சு – விசாரணை என்ற பெயரில் சி.பி.அய். அவரது வீட்டில் நேற்று சோதனை!என்று குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours