தமிழகத்தில் பாஜக வெல்லும்… சுப்பிரமணியன் சுவாமி!

Spread the love

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியில் நிச்சயம் வெல்லும் எனத் தெரிவித்தார். லோக்சபா தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது.

அதில் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இந்த முறை தனியாகக் கூட்டணியை அமைத்துள்ளது. பாஜக 19 இடங்களில் போட்டியிடுகிறது.

சுப்பிரமணியன் சுவாமி:

இதற்கிடையே மதுரைக்கு வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் பேசினார். பாஜக தமிழகத்தில் எந்த தொகுதியில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு அவர், “தமிழகத்தில் முழுமையாக யார் எங்கே போட்டியிடுகிறார்கள் என்பதை நான் பார்க்கவில்லை. நான் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஆய்வு செய்தேன். நெல்லை தொகுதி.. அங்கே நயினார் நாகேந்திரன் களமிறங்குகிறார். அங்கே அவர் கட்டாயம் ஜெயிப்பார்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து ஆளுநராக இருந்த தமிழிசையே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “அது என்னோட தலைவலி இல்லை” என்று அவர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார். வாய்ப்பு இருக்கு: முன்னதாக அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் மேலும் பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர், “லோக்சபா தேர்தலில் நான் இந்த முறை போட்டியிடவில்லை. நான் ஏற்கனவே ஆறு முறை வெற்றி பெற்றுள்ளேன். அவசியம் இருந்தால் ராஜ்யசபா வாங்கிக் கொள்வேன்.

மேலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே பாஜக வளர்ந்துள்ளது. யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்., பாஜக தமிழகத்தில் வெல்ல வாய்ப்புகள் இருக்கிறது” என்றார்.

பாஜக கூட்டணி:

கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் பயணித்த பாஜக இந்த முறை தனது தலைமையில் தனியாக ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 சீட்கள் அமமுகவுக்கு 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும்,, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்குத் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஓபிஎஸ் அணி தனியாக ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. மற்ற 19 தொகுதிகளில் பாஜக களமிறங்குகிறது அதில் கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கும் நிலையில், தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜனும், மத்திய சென்னையில் வினோஜ் பி. செல்வன் போட்டியிடுகிறார். நீலகிரி (தனித் தொகுதி) மத்திய இணை அமைச்சர் எல். முருகன், கன்னியாகுமரியில், பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். அதேபோல விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.

நயினார் நாகேந்திரன்:

மேலும், நயினார் நாகேந்திரன் முதலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில நிமிடங்களில் அவர் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அவர் தான் இந்த முறை வெல்லப் போவதாகச் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours