முதலிடத்தை பிடித்த பாஜக !

Spread the love

கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.2,361 கோடி வருமானத்துடன் தேசிய கட்சிகளில் பாஜக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஆறு தேசிய கட்சிகள் 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு மற்றும் செலவு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தன. அதன் தகவல்களைச் சேகரித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த சங்கத்தின் அறிக்கையின்படி 2022-2023-ம் ஆண்டு தேசிய கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.3,077 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாஜக 76.73 சதவீத பங்கு வருமானத்தைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. 2022-23-ம் ஆண்டில் பாஜகவின் வருமானம் ரூ.2,361 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி ரூ.452.375 கோடி வருமானத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.

இதைத் தவிர பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய 4 தேசிய கட்சிகள் தங்கள் வருமான விவரத்தை தாக்கல் செய்துள்ளன. இதில் ஆம் ஆத்மியின் வருமானம் ரூ.85.17 கோடி, தேசிய மக்கள் கட்சியின் வருமானம் ரூ.7.56 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் ரூ.141.66 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22 மற்றும் 2022-23-ம் நிதி ஆண்டுக்கு இடையில் பாஜகவின் வருமானம் 23.15 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்னதாக 2021-22-ம் நிதி ஆண்டில் பாஜகவின் வருமானம் ரூ.1917.12 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours