#வீடியோ | சர்ச்சையை கிளப்பும் திமுக தேர்தல் பிரசார பாடல்…!

Spread the love

நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக சார்பில் வெளியாகி உள்ள பிரச்சாரப் பாடலில் உள்ள தந்திர நரி ஆரியன், காவி பாவிகள், எங்கிருந்தோ வந்த சங்கிகள் என்னும் வார்த்தைகளால் சர்ச்சைக் கிளம்பி உள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சிகள் தங்களுக்கான பிரச்சாரப் பாடல்களை வெளியிடுகின்றன. பெரும்பாலும் தங்கள் ஆட்சியின் சாதனைகளை விளக்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையிலேயே இந்தப்பாடல்கள் அமைவது வழக்கம். தற்போது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தரப்பில் பிரசாரப் பாடல் வெளியாகி உள்ளது. ஸ்டாலின் குரல் என்ன செய்யும், எங்கெல்லாம் கேட்கும் என்னும் தொணியில் பிரசாரப் பாடல் வரிகள் அமைந்துள்ளது…

நாமளா… அவுகளா பார்ப்போமா
பொய்கள பொய்கள் சாய்ப்போமா
கைகள கைகள சேர்ப்போமா…
ஸ்டாலின் குரல் ஸ்டாலின் குரல் கேட்போமா என்னும் பல்லவியுடன் அந்தப் பாடல் தொடங்குகிறது.

பொய் என்னும் பின்னணியில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட ஒற்றை செங்கல்லை இளையோர் தூக்குவது போல இந்தப் பல்லவிக்கான காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஸ்டாலின் குரல் நமக்காக எப்போதும் உழைக்கும் என்னும் வரிகளைத் தொடர்ந்து
தந்திர நரியின் சூழ்ச்சி அந்த ஆரியனுக்குத் தெரியும் …
இருட்டக் கிழிக்கிற வித்த நம்ம சூரியனுக்குத் தெரியும்…
நம்ம கட்டுன வரிப்பணம் எல்லாம் நமக்குத்தானே வரணும்…
கேட்கும்போது தராதவனுக்கு தோல்விய பரிசாத் தரணும்…
காவி அடிக்கும் பாவிகள தாவி ஓடவிடும் ஸ்டாலின் குரல்…
மொழிய திணிக்கிற ரொட்டிகள கிழிச்சி தொங்கவிடும் ஸ்டாலின் குரல்…
காலை உணவுத் திட்டமுன்னு பிள்ளைங்க மனசுல ஸ்டாலின் குரல்…
ஆயிரம் ரூபா திட்டமுன்னு மகளிர் மனசுல ஸ்டாலின் குரல்..

மதத்தப் பார்த்து மதிப்பவன மிதிச்சி ஓடவிடும் ஸ்டாலின் குரல்…
எங்கிருந்தோ வரும் சங்கிகள பொங்கி புகைய விடும் ஸ்டாலின் குரல்…
நான் முதல்வன் திட்டமுன்னு இளைஞர் மனசுல ஸ்டாலின் குரல்…
மக்களைத் தேடி மருத்துவமுன்னு ஏழைங்க மனசுல ஸ்டாலின் குரல்…

உரிமையை மீட்க ஸ்டாலின் குரல்..
தட்டிக் கேட்க ஸ்டாலின் குரல்…
நீதியைக் கேட்க ஸ்டாலின் குரல்,
தீமையைப் போக்க ஸ்டாலின் குரல்,
பெரியார் வீச்சும், அண்ணா பேச்சும், கலைஞர் மூச்சும் எட்டுத்திக்கும் ஸ்டாலின் குரல்
என்னும்படி பாடலின் வரிகள் அமைந்துள்ளது. இதில் தந்திர நரி ஆரியன், காவி அடிக்கும் பாவிகள், எங்கிருந்தோ வரும் சங்கிகள் என்னும் வரிகள் மத்திய அரசைத் தாண்டி பா.ஜ.க. என்னும் தனிப்பட்ட கட்சியையை சீண்டியிருப்பதாக தற்போது சர்ச்சை கிளம்பியிருக்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours