எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்..!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை, தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கூட்டணியில் இருந்து விலகியுள்ளோம் என அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதிமுக கூட்டணி முறிவை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக பணியில் அதிமுகவினர் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் குறித்து அதிமுக அறிக்கை வெளியிட்டு இருந்தது.

அந்த அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில், வரும் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு, சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours