சுயேட்சை வேட்பாளருக்கு ஓபிஎஸ் தரப்பு மிரட்டலா ?!

Spread the love

ஓ.பி.எஸ் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யக் கூடாது என சிலர் மிரட்டுவதாக இராமநாதபுரம் தொகுதியில் திராட்சை சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க கூட்டணி சார்பில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். அவருக்கு போட்டியாக ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 5 பேர் களமிறங்கியுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொரு ஓ பன்னீர்செல்வத்திற்கு திராட்சை சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு ஓ.பி.எஸ்.,க்கு கரும்பு விவசாயி சின்னம் தரப்பட்டுள்ளது. மற்றொரு பன்னீர்செல்வத்துக்கு பக்கெட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ஓ.பி.எஸ் சார்பில் போஸ்டர்கள், பிளக்ஸ் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலாப்பழம் சின்னம் மற்றும் திராட்சை சின்னம் ஆகிய இரண்டு சின்னமும் பார்க்க கொஞ்சம் ஒரே மாதிரியாக இருப்பதால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திராட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ் தாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தாக்குதல் தொடர்பாக திராட்சை சின்னத்தில் போட்டியிடும் ஓ.பி.எஸ் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில், ராமேஸ்வரத்துக்கு போய் நாங்கள் ஓட்டு கேட்டுவிட்டு மண்டபத்திற்கு அருகில் வந்த போது, சுமார் 50 பேர் என்னை தாக்க முயன்றார்கள். எந்த கட்சி என்று தெரியவில்லை. ஐயா ஓ.பி.எஸ் என்று எதற்காக பிரச்சாரம் செய்கிறாய், இனிமேல் அப்படி செய்யக்கூடாது என்று கூறி, எனது வாகனத்தின் பிளக்ஸ், பேனர் அனைத்தையும் கிழித்தார்கள், இனி ஓ.பி.எஸ் என சொல்லக்கூடாது என மிரட்டினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் பலாப்பழ சின்னத்துக்காரர்கள் மீதுதான் சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours