கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவையில் இன்று காலை முதல் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல், வினோபாஜி நகர், விளாங்குறிச்சி, சேரன் மாநகர் ஆகிய பகுதிகளில் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசியவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்பார் எனவும், அதற்கு மக்கள் பேராதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மற்ற கட்சிகள் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி போதைப் பொருளிலிருந்து அவர்களை காப்பாற்ற பொதுமக்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், தாய்மார்கள் தேர்தலில் வாக்களிக்கையில் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் எனவும், பாஜக வெற்றி பெற்று முதல் 100 நாட்களுக்குள் கோவையில் மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்பு அலுவலகம் திறக்கப்படும் எனவும் அண்ணாமலை வாக்குறுதி அளித்தார்.
+ There are no comments
Add yours